அர்ச்சனாவை அடித்து உட்கார வைத்த ஐபிஎஸ் சந்தியா.. சரவணன் செய்த உருப்படியான காரியம்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் வில்லி அர்ச்சனா, நாத்தனார் பார்வதிக்கு பார்த்த பாஸ்கரன் என்ற வசதியான மாப்பிள்ளையை தன்னுடைய தங்கை பிரியாவிற்கு கட்டிவைக்க விரும்புகிறாள்.

இதற்காக பார்வதி ஏற்கனவே காதலித்த விக்கியை ஏவிவிட்டு, பாஸ்கர் உடன் நெருங்கி பழக வைத்து அதன்பிறகு பார்வதியும் விக்கியும் காதலித்த நாட்களில் எடுத்த புகைப்படத்தை பாஸ்கருக்கு காண்பித்து இந்த திருமணத்தை நிறுத்த திட்டமிடுகிறார்.

இதை அறிந்த சந்தியா, விக்கி-பார்வதி இருவரும் காதலித்த விஷயத்தை சரவணன் மூலமாக பாஸ்கரிடம் சொல்ல வைக்கிறாள். அதன்பிறகு பாஸ்கரும் விக்கியின் சுயரூபம் தெரிந்து, பார்வதியை புரிந்துகொண்டு மனதார ஏற்றுக் கொள்கிறான்.

ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாத விக்கி, பாஸ்கரிடம் பார்வதியை பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அவர்கள் சேர்ந்திருந்த புகைப்படத்தையும் காட்டுகிறான்.

உடனே வெறியான பாஸ்கரன் விக்கியை ஓங்கி அறைந்து, இவ்வளவு நாள் விக்கியும் அர்ச்சனாவும் சேர்ந்து செய்த சதி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான். எப்பொழுதுமே வில்லத்தனமாகவே யோசித்து கேவலமான வேலைகளைச் செய்யும் அர்ச்சனா கடைசியில் பல்பு வாங்குவது வழக்கம் தான்.

அப்படி தான் இப்பவும் பார்வதியின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த அர்ச்சனாவிற்கு சந்தியா சரியான இடத்தில் அடி கொடுத்த உட்கார வைத்து விட்டாள். சந்தியா ஐபிஎஸ் ஆனபிறகு செலவழிக்கும் மூளையை, இப்பவே அர்ச்சனாவை சரி கட்டுவதற்காக பயன்படுத்தி ட்ரையல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.