அரைக்கால் டவுசர் போட்டு அலப்பறை செய்த தளபதி பட நடிகை.. கும்முனு வைரலாகும் புகைப்படம்

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முகமூடி படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு தேசத்திற்கு பறந்து சென்றார்.

பூஜா ஹெக்டே தெலுங்கில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட அல்லு அர்ஜுனுடன் அளவைகுண்டபுரம்லோ படம் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா புட்ட பொம்மா எனும் பாடல் தெலுங்கு தாண்டி தமிழ் வரை ஹிட்டடித்தது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முதலில் ஜார்ஜியாவில் சண்டைக் காட்சிகளை படப்பிடிப்பு நடத்தினர். அதன் பிறகு சென்னையில் பிரபல பாடல் காட்சிகளை படப்பிடிப்பு நடத்தினர்.

தற்போது படக்குழு மீதமுள்ள சண்டைக் காட்சியை எடுப்பதற்காக ரஷ்யாவிற்கு செல்ல உள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இப்படத்தில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்களின் அப்டேட் செய்யும் படக்குழு வெளியிட்டது.

பூஜா ஹெக்டே எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். தற்போது பூஜா ஹெக்டே அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.