அருண்பாண்டியனை ஆதரித்த தயாரிப்பாளர்கள்.. அரவிந்த் சாமியை மட்டும் அலைக்கழித்த பரிதாபம்

ஆரம்பத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்த போது ஏகப்பட்ட பெண் ரசிகர்களை பெற்று இருந்தார். இந்நிலையில் தற்போது வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் அரவிந்த்சாமிக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் தற்போது பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் ஐயங்கார் பிலிம்ஸ் நிறுவனர் அருண்பாண்டி ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதாவது ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் பட்ஜெட்டை விட அந்த நடிகர்களின் சம்பளம் அதிகமாக உள்ளது. இவ்வாறு ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்குவது தப்பு என்று தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

படத்தின் பட்ஜெட்டை விட ஹீரோக்களின் சம்பளம் அதிகமாக இருந்தால் ஒரு தயாரிப்பாளர் அதை எப்படி சமாளிக்க முடியும். இதனால் சில தயாரிப்பு நிறுவனங்கள் வெளியில் வட்டிக்கு வாங்கி படத்தை எடுக்கின்றனர். அப்படி எடுக்கும் படங்களின் படப்பிடிப்பு முடிய கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. அல்லது ஒரு வருடமாவது ஆகிறது.

இப்படி இருக்கும் நிலையில் முதலிலேயே ஹீரோக்கள் பல கோடி சம்பளமாக பெறுகின்றனர். இதனால் ஒரு வருடமாக இவர்களது சம்பள பணத்திற்கான வட்டியையும் தயாரிப்பாளர்கள் தான் சுமக்கின்றனர் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இதனால் படம் ரிலீசான பிறகு ஹீரோக்கள் தங்களது சம்பளத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர்.

இது ஒருபக்கம் நியாயமாக இருந்தாலும், படம் ரிலீசான பிறகு ஹீரோக்கள் இவ்வளவு சம்பளம் தாருங்கள் என்று சொன்னால், படம் லாபத்தை பெற்று தந்தாலும் தயாரிப்பாளர்கள் ஒழுங்கான சம்பளத்தை கொடுப்பதில்லை. இதனால்தான் பல ஹீரோக்கள் படம் ஆரம்பிக்கும் முன்னரே கறாராகப் பேசி சம்பளத்தை வாங்கிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் அரவிந்த்சாமி, நாம் தயாரிப்பாளருக்கு இதுபோன்ற சிக்கலை ஏற்படுத்தக் கூடாது என படம் முடிந்த பின்பு சம்பளம் தாருங்கள் என கூறியுள்ளாராம். அந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்ததாம். ஆனால் அந்தப் படத்தின் சம்பளத்திற்காக இன்றுவரை அரவிந்த்சாமி போராடிக்கொண்டிருக்கிறாராம்.