அரசியல் பேசி மக்களை ஏமாற்றுகிறாரா விஜய்.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை

நடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் அரசியலிலும் தன்னுடைய நகர்வை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட இவருடைய ரசிகர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தனர்.

இதனால் விஜய் கூடிய விரைவிலேயே அரசியலில் காலடி வைப்பார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் அவரும் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

சில காலமாகவே விஜய் தன்னுடைய பட பாடல் வெளியீட்டு விழாவின்போது குட்டி கதை சொல்வது, அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுவது என்று ரசிகர்களை பரபரப்பாக்கி வருகிறார். இதனால் அவர் தன் அரசியல் பிரவேசத்தை சீக்கிரம் ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆரம்பத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்த விஜய் தற்போது மாஸ்டர் பட திரைப்படத்தின் போது நடந்த ஐடி ரெய்டால் அமைதி காத்து வருகிறார். அதனால் விஜய் பேசும் அரசியல் எல்லாம் அவருடைய பிசினஸ்க்காக மட்டும் தான் என்று மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அதாவது விஜய் காவலன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது அந்தப் பட வெளியீட்டில் திமுக பிரச்சனை செய்தது. அதன் பிறகு ஒருவழியாக படம் ரிலீஸ் ஆனது. ஆனால் விஜய் தற்போது அந்த விஷயத்தை மறந்து விட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தலைவா படம் உருவாகும் போது அதிமுக படம் ரிலீஸ் ஆவதற்கு பெரும் பிரச்சனை செய்தது. இதனால் படக்குழு பெரும் சிக்கல்களுக்கு நடுவில் அந்த படத்தை ரிலீஸ் செய்தது. ஆனால் அதன் பிறகு விஜய் மாஸ்டர் படத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் போது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சமாதானம் செய்தார்.

அதேபோல மெர்சல் படம் உருவான போது அந்த படத்திற்கு எதிராக பிஜேபி பிரச்சனை செய்தது. குறிப்பாக சுப்பிரமணிய சுவாமி விஜய்யை பற்றி பல விஷயங்களை பேசி பிரச்சனையை செய்தார். இதனால் ஜோசப் விஜய் என்ற பிரச்சனை மிகப்பெரும் பிரச்சினையாக தலை தூக்கியது.

ஆனால் இப்போது விஜய் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இருக்கிறார். இதன் மூலம் அவர் நான் பிஜேபிக்கு ஆதரவு என்பதுபோல் நடந்து கொண்டிருக்கிறார். ஆகமொத்தம் விஜய் பேசும் அரசியல் எல்லாம் தன்னுடைய பட பிஸ்னசுக்காக மட்டும் தான்.

தமிழ் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்து வருகிறது. அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டார். அவருக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் மட்டும்தான் எதையாவது கிளப்பி விடுவார் என்று மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி விஜய்யை வெளுத்து வாங்கியிருக்கிறார்.