அம்மு அபிராமி ஜோடியாகும் குக் வித் கோமாளி பிரபலம்.. விஜய் டிவி இல்லைனா இவங்க ரெண்டு பேரும் இல்ல

விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களும் ரசிகர்களுக்கு பிரியமானவர்கள். அப்படி இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த, பிரபலங்கள் நேரடியாகவே திரைத்துறையில் காலடி வைத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலங்கள் 2 பேர் இணைந்து நாயக நாயகிகளாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களிடம் கோமாளியாகவும், தற்போது வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் விஜய் டிவி புகழ். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த புகழுக்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

இந்த நிலையில் குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வரும் அம்மு அபிராமி தற்போது விஜய் டிவி புகழ் உடன் குதூகலம் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கண்ணகி, யானை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அம்மு அபிராமி தற்போது இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் டிவி புகழுடன் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தங்கரதம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பாலமுருகன் இயக்கவுள்ளார். ஏற்கனவே குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின், ரம்யா பாண்டியன், சிவாங்கி, பாலா உள்ளிட்டோர் பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

அதிலும் முக்கியமாக இந்நிகழ்ச்சியின் சீசன் 2 வில் கலந்துகொண்ட நடிகர் அஸ்வின் மற்றும் சிவாங்கியின் ஜோடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனிடையே தற்போது இந்த வரிசையில் அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் இணைந்துள்ளனர்.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் அம்மு அபிராமி இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றதற்கு பின் புகழுடன் இணைந்து குதூகலம் படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அம்மு அபிராமியின் போகாதே என்ற மியூசிக் ஆல்பம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களான புகழ் மற்றும் அம்மு அபிராமியின் ஜோடியில் உருவாக இருக்கும் குதுகலம் திரைப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.