அம்மாவைப் போல் அச்சு அசலாக அருண் விஜய் மகள்.. கண்டிப்பா நாலு வருஷத்துல ஹீரோயின்தான்

பண்டிகை என்றாலே நடிகர் விஜயகுமாரின் மகன், மகள்களின் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வரும். ஏனென்றால் எந்த ஒரு பண்டிகையும் தவறவிடாமல் சிறப்பாக குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். அந்த வகையில் நடிகர் அருண்விஜய் தன் குடும்பத்துடன் இந்த தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

அருண் விஜய் 2006 ல் ஆர்த்தி மோகனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூர்வி என்ற மகளும், அர்னவ் விஜய் என்ற மகனும் உள்ளார். இந்த தீபாவளியில் அப்பாவும் மகளும் நீல நிற ஆடையும், அம்மாவும் மகனும் வயலட் நிற ஆடையும் அணிந்திருந்தார்கள். இதிலிருந்து அப்பாவும் மகளும் எவ்வளவு பாசமாக உள்ளார்கள் என்பது தெரிகிறது.

அருண் விஜய் மகள் பூர்விக்கு தற்போது 14 வயது ஆகிறது. தற்போது பூர்வியின் புகைப்படத்தை பார்த்த பலரும் அருண் விஜய்க்கு இப்படி ஒரு மகளா என ஆச்சரியப்படுகிறார்கள். இதனால் இன்னும் 4 வருடங்களுக்குப் பிறகு இவரை சினிமாவில் பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அருண் விஜய் மகன் அர்னவ்க்கு ஒன்பது வயதாகிறது. அர்னவ் கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் உடையவராக இருக்கிறார். சரோவ் சண்முகம் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அரனவ் நடித்து வருகிறார். எனவே தாத்தா, தந்தை போல இவரும் ஒரு பெரிய நடிகராகலாம் என எதிர்பார்க்கலாம்.

ஒரே நாளில் OTTயில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 முக்கிய படங்கள்.. எனக்கு வேற வழி தெரியல பாஸ்

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருபவர் சமுத்திரக்கனி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தற்போது சமுத்திரகனி நடிப்பிலும் அதிக கவனம் ...