விஸ்வாசம் படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படம் வெளிவர உள்ளது. தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளிவர உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். இதற்கான புரமோஷன் வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 200-க்கும் மேலான தியேட்டர்களை புக் செய்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதுமே தன் படத்தினை புரோமோஷன் செய்வதில் கில்லாடி என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தற்போது படத்தினைப் பற்றிய பாடல் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றனர்.

இப்படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர் முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் உடன் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சமீபத்தில் கூட ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்த அண்ணன் தங்கச்சி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பே கீர்த்தி சுரேஷின் அம்மாவான மேனகா சுரேஷுடன் இணைந்து ரஜினிகாந்த் நெற்றிக்கண் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது அவரது மகளான கீர்த்தி சுரேஷ் உடன் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் அம்மா மகளுடன் இணைந்து நடித்துள்ள இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பல வருடங்களாக சினிமாவில் நடித்துவரும் ரஜினிகாந்த் இனி வரும் படங்களில் முன்னணி நடிகைகளின் மகள்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என பலரும் கூறுகின்றனர்.