ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் தற்போது படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் படத்தை பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் 22 மாதங்களுக்குப் பிறகு திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் படத்தை திரையில் காண்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தை ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுவார்கள் என பலரும் கூறி வந்தனர்.

ஆனால் படக்குழுவினர் அண்ணாத்த படத்தின் பாடல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதற்கு காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதும் ரசிகர்கள் வரவைத்து ஆடியோ லான்ச் வெளியிடுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடியோ லான்ச் வெளியிடாமல் பாடலை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டனர்.

தற்போது அனைத்து படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவை தாண்டி பல நாடுகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 300 திரையரங்குக்கு மேல் அண்ணாத்த படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் அண்ணாத்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.