அமீர் எனக்கு கொடுத்த முத்தம் சும்மா.. அவருக்கு பாவனி கொடுத்த முத்தம் தான் ஹைலைட்!

விஜய் டிவியில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சிக்குப் பிறகு அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீடியாவில் அவ்வபோது பேட்டி அளித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் சீரியல் நடிகை ஆக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகை பாவனி முதல்முதலாக பிக்பாஸ் வீட்டில் தனக்கும் அமீருக்கும் இடையே இருந்த உறவை பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.

வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அமீர், பாவனியை விட அதிகமாக நெகட்டிவ் கமெண்ட் வாங்கி விளையாட்டை சரியாக விளையாடவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தன் வீட்டாரிடமிருந்தே பெற்றார்.

அதன் பிறகு வீட்டிற்கு வரும் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்களின் பேச்சை கேட்டு தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்திய அமீர், டாப் 5 இடத்தை பிடித்தார். ஆனால் அமீர் தன்னை காதலிப்பதை புரிந்துகொண்ட பாவனி, அவர் காதலை சொன்ன பிறகும் அமீர் மீது ஒருமுறைகூட கோபத்தைக் காட்டாமல் அமீரை தன்னுடைய நண்பனாக மட்டுமே பார்த்ததாக தற்போது அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் எனக்கு நிறைய உறவுகள் கிடைத்திருக்கிறது. அதில் அமீரும் ஒருவர். அமீர் என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா? என்று முகத்திற்கு நேராக கேட்ட ஜென்டில்மேன், ஆனால் அந்த உறவில் எனக்கு விருப்பமில்லை என்று அப்பொழுதே சொல்லிவிட்டேன்.

அத்துடன் அமீர் எனக்கு கொடுத்த முத்தம் மட்டும் வெளியில் வேறு விதமாக காட்டப்பட்டிருக்கிறது. நான் நிரூப்பிற்கு கூட முத்தம் கொடுத்திருக்கிறேன். ஆனால் அதை வெளியில் காட்டாமல் எடிட்டிங் செய்திருக்கின்றனர்.

ஏனென்றால் உங்களுக்குக் காட்டப்படும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடக்கும்23 மணி நேர காட்சிகள் பெரும்பாலும் மறைக்கப்பட்டுவிடும். இவ்வாறு பிக்பாஸ் வீட்டில் தனக்கும் அமீருக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது என்பதை பாவனி வெளிப்படுத்தியிருக்கிறார்.