அப்ப தனுஷுடன் துணை நடிகர்.. 15 வருடம் கழித்து அவருடன் தேசிய விருது வாங்கிய மாஸ் ஹீரோ

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டார்.

நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். இந்த விருது விழாவிற்கு தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் நம் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்து வந்து இருந்தனர்.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின்பே அவர் கதாநாயகன் ஆகும் வாய்ப்பை பெற்றார். தற்போது அவர் கதாநாயகன் மட்டுமல்லாது வில்லன் குணச்சித்திரம் போன்ற பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடித்து வருகிறார்.

அந்த வகையில் விஜய் சேதுபதி தனுஷின் புதுப்பேட்டை திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக அடியாள் வேடத்தில் நடித்து இருப்பார். அன்று தனுஷுடன் சிறு வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி இன்று அவருடன் ஒன்றாக தேசிய விருது வாங்கும் அளவிற்கு தன் திறமையால் உயர்ந்துள்ளார்.

இதை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதி புதுப்பேட்டையில் தனுஷின் பின்னாடி நிற்கும் புகைப்படத்தையும், தற்போது தனுசுடன் ஒன்றாக விருது வாங்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பான பல மீம்ஸ்களும் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. முயற்சியால் ஒருவர் இந்த அளவுக்கு உயர முடியும் என்பதற்கு விஜய் சேதுபதி ஒரு எடுத்துக்காட்டாக  உள்ளார்.

சக்சஸ் கொடுக்காமலேயே பல கோடி சொத்து மதிப்பு.. மாதவனின் ரகசியத்தை வெளியிட்ட பயில்வான்

சாக்லேட் பாய் மாதவனுக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அலைபாயுதே படம் இவரது திரை வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்தது. பெண் ரசிகர்களால் மாதவன் மேடி என்று அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவை தாண்டி ...