அப்ப இனிக்குது, புகழை பார்த்தபின் கசக்குதா.? நடிகைகளை விடாமல் வெளுத்து வாங்கும் பயில்வான்

சினிமா என்றால் கிசுகிசு, நடிகர் நடிகைகளின் நட்புறவு உள்ளிட்டவை இருப்பது சகஜம் ஆனால் இது எல்லாம் ரகசியமாக இருக்கும் வரை தான் நல்லது. இதை யாராது ஓபனாக பேசிவிட்டால் சர்ச்சைகளால் இணையத்தில் வைரலாகி விடும். அப்படி நடிகர் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி தற்போது ரொம்பவே ஓப்பனாக இணையத்தில் பேசி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன்.

நாம் அன்றாடம் பொழுதுபோக்காக பார்க்கும் சினிமாவில் இருக்கும் நடிகைகள், நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் உண்மையான வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்வதில் நாம் எல்லோருக்கும் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வத்தின் காரணமாக நமக்கு பிடித்தமான நடிகர் நடிகைகளின் ரகசியங்களை தெரிந்து கொண்டு அவர்கள் மேல் ஈர்ப்பினை அதிகரித்துக் கொள்வோம் அல்லது வெறுப்பினை அதிகரித்துக் கொள்வோம்.

இப்படிப்பட்ட ரகசியங்களை புட்டுப்புட்டு வைக்கும் விதமாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தற்போது பேசி வருகிறார். தன்னுடைய பேச்சில் எந்த ஒரு மறைமுகம் இல்லாமல் நேரடியாகவே பயப்படாமல் பேசும் இவர் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார். இப்படி நடிகர் நடிகர்களின் வாழ்க்கையை பற்றி பேசிவரும் பயில்வானிடம் பேட்டி ஒன்றில் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது பேட்டி எடுத்த தொகுப்பாளர் ஒருவர், நடிகர்களை விட நடிகைகளின் அந்தரங்கங்களை பற்றி நீங்கள் பேசி வருகிறீர்கள் இதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பயில்வான், பல நடிகைகள் திரைத்துறைக்கு வரவேண்டும் என்ற ஆசைக்காக ஆரம்பத்திலே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வர்.

பின்னர் ஒரு நான்கு திரைப்படங்கள் நடித்து பிரபலமடைந்தற்குப் பிறகு அந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என குற்றம் சாட்டுவார்கள். அப்படி குற்றம்சாட்டும் நடிகைகளிடம் எந்த ஒரு நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இவர்களும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாமல் இருந்து அவர்கள் மீது குறை சொன்னார்கள் என்றால், அது நியாயம். ஆனால் இவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு பின்னர் குறை கூறி வருவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

இதைதான் என்னுடைய வீடியோக்களில் நான் தெரிவித்து வருகிறேன். இதைப்பற்றி நான் சொன்னால் பயில்வான் எப்படி பேசுறாரு பாரேன் என்று என்மீது பாய்ந்து விடுகிறார்கள். நான் நடப்பதை மட்டுமே சொல்கிறேன் அதனால் எனக்கு எப்போதும் பயம் கிடையாது. நடிகர்கள் நடிகைகளை பற்றி மட்டும் சொல்வதில்லை திரைத்துறையில் இருக்கும் அவலங்களைப் பற்றியும் நான் கூறி வருகிறேன். இதனால் எனக்கு யார் மீதும் எந்த ஒரு வெறுப்பும் கிடையாது. என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.