அப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள், மகனுக்கு ஜோடி!

திரைப்படங்களில் கதாநாயகன், கதாநாயகி சேர்ந்து நடிப்பது வழக்கம் தான். ஆனால் இவர்களது வாரிசும் சேர்ந்து படங்கள் நடித்துள்ளனர்.

சிவாஜி, பிரபு: நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தேவிகா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ஆண்டவன் கட்டளை. நடிகர் திலகத்தின் மகனான இளைய திலகம் பிரபு ,தேவிகாவின் மகள் கனகா இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் 1995 இல் வெளியான பெரிய வீடு மற்றும் 1994 இல் வெளியான ஜல்லிக்கட்டுக்காளை.

சிவாஜி கணேசன், லக்ஷ்மி இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் 1982-ல் வெளியான நெஞ்சங்கள். பிரபு,லட்சுமி மகள் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் 1999 இல் வெளியான சுயம்வரம்.

முத்துராமன், கார்த்திக்: 1962 இல் வெளியான நெஞ்சில் ஒரு ஆலயம் திரைப்படத்தில் முத்துராமன்,தேவிகா இணைந்து நடித்திருந்தனர்.
முத்துராமனின் மகன் கார்த்திக் தேவிகாவின் மகள் கனகா இருவரும் சேர்த்து நடித்த திரைப்படங்கள் 1989 பெரிய வீட்டு பண்ணைக்காரன்.1990ல் எதிர்காற்று திரைப்படமும் 1996 இல் கட்ட பஞ்சாயத்து படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்கள்.

கார்த்திக், கௌதம் கார்த்திக்: கார்த்திக், ராதா இருவரும் இணைந்து நடித்த படம் 1981இல் வெளியான அலைகள் ஓய்வதில்லை மற்றும் வாலிபமே வா.
கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் மற்றும் ராதாவின் மகள் துளசி இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் கடல். இத்திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார்.

சிவக்குமார், சூர்யா: 1983இல் சிவகுமார், மேனகா இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். சிவகுமாரின் மகன் சூர்யா மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் 2018 இல் வெளியான தானா சேர்ந்த கூட்டம்.