விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக ஓடிக் கொண்டிருப்பது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிகழ்ச்சியில் கண்ணன் கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இவரின் தாய் பாசத்தை பற்றிதான் வலைதளங்களில் பேச்சு அதிகமாக உள்ளது.

அதனால் இவர் தனது உண்மையான தாயுடன் இருப்பது போல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு கமெண்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இவருகென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இவரின் ரசிகரால் இந்த புகைப்படம் வலைதளத்தில் ஷேர் செய்யப்படும் லைக் செய்யப்பட்டும் வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட எபிசோடுகளில் இவருக்கு தான் நடிப்பு அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் தாய் பாசத்தை வெளிப்படுத்துவதை பார்த்த பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடித்து வரும் அனைத்து நடிகர், நடிகைகளும் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அனைவருக்கும் கூட்டம் கூட்டமான ரசிகர்கள் உருவாக்கி வருகின்றனர். இது தமிழ் சின்னத்திரை சீரியல்களில் டாப் 5 சீரியலில் ஒன்றாகும்.

இந்த நெடுந்தொடர் பாசமான 4 அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக எவ்வாறு வாழ்கிறார்கள், இவர்களுக்கு வரும் சூழ்நிலைகளை எப்படி கையாளுகிறார்கள் என்பதை எல்லாம் எடுத்துக் கூறும் ஒரு குடும்பக் கதையாகும். சமீபத்தில் இவர்களது தாய் ஷீலா என்பவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.

இவரின் இறுதி சடங்குகளின் போது முகத்தைக்கூட காண முடியாத கண்ணன் தவிப்பதை, பார்க்கிற ரசிகர்களே தவித்துப் போயினர். கண்ணனின் இந்த இயல்பான நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.