அபிஷேக்கை பற்றி புரளி பேசும் ஹவுஸ் மேட்.. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறி வருகின்றனர்.

இன்று விஜே அபிஷேக் தனது குடும்ப சூழ்நிலையை பற்றி போட்டியாளர்கள் இடையே பகிர்ந்து கொள்கிறார். கடவுள் மேல வைக்குற நம்பிக்கையின் மேல் எனக்கு  நம்பிக்கை இருக்கு என்று ஆரம்பிக்கிறார்.

எங்க அப்பா ரத்தம் சிந்தி சம்பாதிச்சது, யாரையும் ஏமாத்தல என்றும், அடிக்க அடிக்க நான் வந்து கொண்டுதான் இருப்பேன். பிடிக்கிதோ, பிடிக்கலையோ வேற வழி இல்ல என்று கூறுகிறார்.

அபிஷேக் பேசியதை கண்டு நடிகர் ராஜு அவன் சொன்னது எனக்கு ரிலேட் ஆச்சு என்றும், இமான் அண்ணாச்சி ரெண்டு வருஷத்துல நான் மீட்டெடுத்தேன்னு சொன்னது எனக்கு புடிச்சிருக்கு என்றும் பேசிக்கொள்கின்றனர்.

இந்த ப்ரோமோ பார்க்கும் பொழுது அபிஷேக் என்ன சொல்ல வரார்னு ஒன்னும் புரியல. இருந்தாலும் இந்த வார நாமினேஷன் க்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோனு தோணுது அந்த அளவுக்கு பர்பாமன்ஸ் கொடுக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், என்ன எல்லாம் சொல்றேன் பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் இழுத்து விடுறான் என்று கலாய்க்கின்றனர்.

10 லட்சம் பரிசு வென்ற சூப்பர் சிங்கர் 8 டைட்டில் வின்னர்.. ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்த விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரபலமானது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரண்டு விதங்களில் மாறி மாறி ஒளிபரப்பாகிறது. அந்தவகையில் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியின் சூப்பர் ...