பிக் பாஸ் சீசன் 5 ல் இன்றைய ப்ரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி என்ற தலைப்பு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளனர்.

அதில் ஒரு அணி கண்ணாடியாக மாறி மற்றொரு அணியில் உள்ள நபரை பிரதிபலிக்க வேண்டும். நிரூப், அபிநயின் கண்ணாடியாக மாறி பிரதிபலிக்க வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது.

அப்போது அபிநய் தன்னுடைய முடியை வெட்டுகிறார். இதனால் வேறு வழியின்றி நிரூப்பும் தன்னுடைய முடியை வெட்டும் படி ஆகிறது. ஒரு மாடலாக இருக்கும் நிரூப் தன்னுடைய முடியை நீளமாக வளர்த்து வருகிறார்.

ஆனால் அபிநய் செய்த செயலால் தன் முடியை வெட்டும் படி ஆகிவிட்டது என்ற கோபத்தில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் நீ என்னை பழிவாங்க வேண்டுமென்று தான் இவ்வாறு செய்தாய் என்று சண்டையிடுகிறார்.

இருவருக்குள்ளும் சண்டை முற்றியது அவர்களை சமாதானப்படுத்த பிரியங்கா மற்றும் இதர போட்டியாளர்கள் முயற்சி செய்கின்றனர். அபிநய் நான் எதார்த்தமாக தான் செய்தேன் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் நிரூப் கேட்பதாக இல்லை. இறுதியில் என்னை மொட்டையடித்து இருந்தாலும் இந்த ரியாக்சன் தான் நான் கொடுத்து இருப்பேன் என்று சொல்கிறார். அதற்கு அபிநய் உன்னை மொட்டை தான் அடிக்கப் போகிறேன் என்று பதிலளிக்கிறார்.

நாமினேசன் இல் இருந்து காப்பாற்றுவதற்காக முடியை வெட்ட வேண்டும் என்று கூறியிருந்தால் விருப்பு உடனே முடியை வெட்டி இருப்பார். ஆனால் ஏற்கனவே அபிநய் உடனிருந்த பிரச்சனையின் காரணமாக அவர் இவ்வளவு ஆக்ரோஷமாக சண்டை போட்டுள்ளார்.

இவ்வளவு சண்டையிலும் அமைதியாக அபிநய் பதிலளித்துள்ளது அவருக்கு இருக்கும் விளையாட்டின் புரிதலை காட்டுகிறது. இது அவருக்கு நிச்சயம் ஒரு நல்ல முன்னேற்றம் ஆகவே இருக்கும்.