அனிருத், தனுஷ் கூட்டணியில் பிரபல நடன இயக்குனர்.. பாட்டு கன்ஃபார்மா ஹிட்

தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை கால்பதித்த ஒரே ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் மட்டும் தான். தமிழ் சினிமாவிலும் இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி பல விருதுகளையும் குவித்து வருகிறது. சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் சைமா விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். ‌இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக இணைந்துள்ளார்.

மேலும் பாடல் காட்சியின்போது தனுஷுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜானி மாஸ்டர் கூறியுள்ளதாவது, தனுஷின் 44வது படமான திருச்சிற்றம்பலம் படத்தில் அவருடன் இணைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனிருத் இசையில் தனுஷின் துள்ளலான நடனத்தை காண தயாராக இருங்கள். இந்த வாய்ப்பை வழங்கிய ஜவஹர் மற்றும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

ஜானி மாஸ்டர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் ராம்சரண் 15 படத்திலும் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே மாபெரும் வெற்றி பெற்ற தனுஷின் பாடல் மற்றும் அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசவ வலியில் துடித்த தனம், உதவியது யார் தெரியுமா.? பாண்டியன் ஸ்டோரில் செம்ம ட்விஸ்ட்

விஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். பல திருப்பங்களுடன் இக்கதை நகர்ந்து வருகிறது. மூர்த்தியின் கடைசி தம்பியான கண்ணன், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கண்ணனை ...