அனல் பறக்க ரீமேக்காகும் சிம்புவின் மாநாடு.. ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் மாநாடு. முன்னதாக தீபாவளி அன்று ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள அண்ணாத்த படத்துக்கு போட்டியாக மாநாடு படம் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மாறுபட்ட கதைகளமாக உருவாகி உள்ள மாநாடு படம் டைம் லூப் அடிப்படையில் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாநாடு படம் இன்னும் வெளியாகவே இல்லை ஆனால் அதற்குள் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

அதற்காக மாநாடு படத்தின் இயக்குனர் மற்றும் எடிட்டரை இன்று சந்திக்க நேரில் அழைத்து உள்ளாராம். இதுதவிர மாநாடு படத்தை இன்று ஆந்திராவில் அல்லு அர்ஜுன் பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்துவிட்டு நிச்சயம் ரீமேக் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாகவே தமிழ் படங்கள் தெலுங்கு உள்ளிட்ட இதர மொழிகளில் ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது சிம்புவின் மாநாடு படமும் இணைந்துள்ளது. ஏற்கனவே பல தடைகளை சந்தித்துள்ள மாநாடு படம் தற்போது தான் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ள செய்தி சிம்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.