அனபெல் சேதுபதி ட்விட்டர் விமர்சனம்.. என்ன அதிரடியா வெளிவந்தும் இப்படி சொல்லிட்டாங்க

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அனபெல் சேதுபதி. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி படம் ஒரு பேய் படமாக அல்லாமல் ஃபேண்டஸி காமெடி படமாக உருவாகி உள்ளது. எனவே இப்படம் நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து பிரபல பத்திரிக்கையாளரும், பட விமர்சகருமான ரமேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “இது ஒரு சிறந்த ஃபேண்டஸி காமெடி படம். விஜய் சேதுபதி அவரது தனிப்பட்ட ஸ்டைல் மூலம் ஸ்கோர் செய்துள்ளார். டாப்சி மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நகைப்பூட்டியுள்ளார்.

மேலும் இப்படத்தை நிச்சயம் குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள்” என கூறியுள்ளார். மேலும் அனபெல் சேதுபதி படத்திற்கு 5க்கு 3.5 மதிப்பெண் வழங்கியுள்ளார். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை ரசிகர்கள் பார்த்து தெரிவித்தால் உண்மை நிலவரம் தெரியும்.

முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியையே சந்தித்தன. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அனபெல் சேதுபதி படமும் ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும் முடிவு என்னவென்பது விரைவில் தெரிந்து விடும்.

பெரிய பெரிய தலைகளை குறிவைக்கும் மதுரை அன்பு.. முதல் ஆளாய் தூண்டிலில் சிக்கிய சந்தானம்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் மதுரை அன்புச்செல்வன். இவர் தன்னுடைய கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அன்புச் செழியன் இல்லத் திருமணம் வெகு சிறப்பாக ...