அனபெல் சேதுபதியின் இயக்குனர் யார் தெரியுமா? முதல் படமே 365 நாள் ஹிட் கொடுத்த பிரபலத்தின் மகன்

அனபெல் சேதுபதி இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் யார் தெரியுமா.? இயக்குனர் மற்றும் நடிகரான ஆர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தான் அனபெல்லா சேதுபதி படத்தின் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்.

1982 இல் வெளியான பயணங்கள் முடிவதில்லை மூலம் அறிமுக இயக்குனராக அறிமுகமானவர் ஆர் சுந்தர்ராஜன் இந்த திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா பாக்கியராஜ் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படம் 365 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

முதல் படத்திலேயே பெரிய வெற்றி கண்டவர் இவர் அதிகமாக மோகன் அவர்களை வைத்து படங்கள் இயக்கி இருப்பவர் அனைத்து படங்களுமே வெற்றி பெற்றன சரணாலயம், மெல்லத் திறந்தது கதவு போன்ற படங்கள் மோகன் நடித்திருப்பார்.

விஜயகாந்த் வைத்து அவர் இயக்கிய படங்கள் வைதேகி காத்திருந்தால், அம்மன் கோயில் வாசலிலே, என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண் இந்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய ராஜாதி ராஜா மிக பெரிய வெற்றி பெற்றது,கார்த்திக்  வைத்து இயக்கிய படம் என் ஜீவன் பாடுது சத்யராஜ் உடன் திருமதி பழனிசாமி, பிரபுவுடன் சீதனம் ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.

இளையதளபதி வைத்து இயக்கிய படம் காலமெல்லாம் காத்திருப்பேன் இத்திரைப்படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை மொத்தம் 24 படங்கள் இயக்கியுள்ளார் 97 பிறகு படங்கள் இயக்குவது இல்லை. கடைசியாக 2013இல் இயக்கிய நிலாச்சோறு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் சுந்தர் ராஜனுக்கு இரு மகன்கள் உள்ளனர் அசோக் கார்த்திக், தீபக் சுந்தரராஜன். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவான அனபெல் சேதுபதி திரைப்படத்தை இயக்கியவர் தீபக் சுந்தர்ராஜன்.

தீபக் படம் இயக்கப் போவதாக அப்பாவிடம் சொல்லும்போது நீ என்னைப்போல் இல்லாமல் முதல்ல போயி உதவி இயக்குனராக வேலை செய், பின்பு படம் இயக்கு என்று அறிவுரை கூறினாராம். உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு இத்திரைப்படத்தை இயக்கினார் தீபக்.

லைக்காவை வளைத்துப் போட்ட உதயநிதி.. சேனாதிபதியாக மாஸ் காட்டும் இந்தியன்-2 பட போஸ்டர்

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. முதலில் படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்பு ...