அனகோண்டா பாம்புக்கு நடுவில் துருவ் விக்ரம்.. படு மாஸ் கிளப்பிய விக்ரம் பட போஸ்டர்

கார்த்திக் சுப்புராஜ், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரையும் வைத்து ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் வாணி போஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரமுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு புறப்படுவதற்கு முன்பு வரை பரபரப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த படத்திற்காக துருவ் விக்ரம் தன்னுடைய உடல் எடையை பயங்கரமாக ஏற்றியுள்ளார். இதற்கான புகைப்படங்கள் கூட வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. சமீபத்தில் வாணி போஜன் ஒரு பேட்டியில் இது ஒரு ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

தற்பொழுது இந்த படத்திற்கு மகான் என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். மகான் பட போஸ்டர்.