அந்த மாதிரி கதைகளில் நடிக்க சம்பளம் ஒரு பொருட்டல்ல.. சந்தானம் பட நடிகை ஓபன் டாக்.!

நட்பே துணை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனைகா. ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து இவர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றது. அதன்பிறகு மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து தனது வெற்றியை பதிவு செய்து வந்தார்.

பின்பு மீண்டும் சந்தானத்துடன் டிக்கிலோனா எனும் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக இவர் நடித்திருந்தார். குறிப்பாக பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடலில் இவரது நடனத்தை பார்த்து ஏங்கி போன ரசிகர்கள் ஏராளம் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு இப்பாடலில் இவரது நடனத்தை பார்த்து பல ரசிகர்களும் சமூக வலைதள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து வந்தனர். எப்போதும் நடிகைகளிடம் அனைத்து விதமான கேள்விகள் கேட்பது வழக்கம் .

அதுபோல் சமீபத்தில் அனைகா கலந்துகொண்ட பேட்டியில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஏன் குறிப்பிட்ட படங்கள் மட்டும் நடிக்கிறீர்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையா என கேட்டனர். அதற்கு சம்பளம் எனக்கு முக்கியமில்லை கொடுக்கக்கூடிய கதாபாத்திரங்கள் முக்கியம் என கூறியுள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் ஏராளமாக வந்து கொண்டிருப்பதாகவும் அந்த மாதிரி படங்களில் தனக்கு நடிப்பதற்கு ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு மாடலிங் பிடிக்கும் என்பதால் தான் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறேன் எனவும் மேலும் மாடலிங் துறையிலும் பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஹ்மான் வந்தது என்னுடைய சுயநலம்தான்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பார்த்திபன்

தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு புதுமையான விஷயங்களை செய்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். ஒரு நடிகராக இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு திரையுலகில் நல்ல ...