சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார்  இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும்  வரவேற்பை பெற்று வரும் டாக்டர் படத்தின் மூலம்  தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இதனால் தற்போது அடுத்தடுத்து பிரியங்கா மோகனுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறி வருகின்றனர்.

அனைவரும் டாக்டர் படம்தான் பிரியங்கா மோகனுக்கு முதல் படம் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படம் அவருக்கு முதல் படம் கிடையாது. இவர் ஏற்கனவே டிக் டாக் எனும்  படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் வெளியாவதற்கு முன்பே டாக்டர் படம் வெளியானதால் டாக்டர் முதல் படமாக கருதப்படுகிறது.

இப்படத்தில் பிரியங்க மோகன் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் குடும்ப குத்துவிளக்காக இவர் நடித்த காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இதனால் பலரும் பிரியங்கா மோகன் அருமையான நடிகை என கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் இவர் முதலில் நடித்த டிக் டாக்  படம் வெளியாக உள்ளது.

 இப்படத்தில் பிரியங்கா மோகன் அதிகப்படியான கவர்ச்சியில் நடித்துள்ளார். தற்போது பிரியங்கா மோகனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக கல்லா கட்ட முடியும் என நினைத்து தயாரிப்பாளர் அடுத்ததாக டிக் டாக் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இதனைக் கேட்ட பிரியங்கா மோகன் உடனே தயாரிப்பாளருக்கும் போன் செய்து இப்பதான் சார் என்  கேரியர் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் நான் கவர்ச்சியாக நடித்த படத்தை வெளியிட்டால் என்னுடைய இமேஜ் கெட்டுவிடும். அதன்பிறகு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனக் கூறி கண்ணீர் விட்டு புலம்பியுள்ளார்.