தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார்.

ஆனால் சமீபகாலமாக விஜய் சேதுபதி யாரையும் மதிக்காமல் மெத்தன போக்காக இருந்து வருகிறார் என்ற பொதுவான பேச்சு சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது. மேலும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவது திமிர்த்தனமாக பேசுவது என தனது உண்மை முகத்தை தற்போது வெளிப்படுத்தி வருகிறார்.

இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வி அடைந்ததை அடுத்து விஜய் சேதுபதி தோல்வி நாயகன் என கூறி வருகின்றனர்.

ஆனால் விஜய் சேதுபதி வெற்றி அடைந்தாலோ, தோல்வி அடைந்தால் அதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து ஒருவெப்சீரிஸ்சை இயக்கி வருகின்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸ்ல் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே முகில் எனும் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் விஜய் சேதுபதிதான் ரெஜினா கசாண்ட்ராவை சிபாரிசு செய்து இருப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.