அந்த நடிகைக்கு ஆசைப்பட்ட ஜெயம் ரவி.. விருப்பத்தை நிறைவேற்றிய இயக்குனர்

சமீபகாலமாக ஜெயம் ரவி பல நல்ல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று மிகவும் வெறித்தனமாக நடித்து வருகிறார். எப்படியாவது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து வெற்றி நடிகராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.

அப்படி அவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் அவருக்கு வசூல் ரீதியாக பாதிப்பை கொடுத்திருந்தாலும் விமர்சன ரீதியாக நல்ல பெயரையே கொடுத்துள்ளது. இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

பல முன்னணி இளம் நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் ஜெயம் ரவிக்கு பிரபல நடிகை ஒருவருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது நெடு நாள் ஆசையாக இருந்து வருகிறது. அந்த நடிகை வேறு யாருமல்ல நடிகை கீர்த்தி சுரேஷ் தான்.

ஒருமுறை ஜெயம் ரவி மேடையில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடிக்க வேண்டும் என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதற்கு கீர்த்தி சுரேஷும் நல்ல வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் சேர்ந்து நடிக்கலாம் என்று கூறியிருந்தார். தற்போது அந்த வாய்ப்பு ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது.

அதாவது ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில்தான் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

ஒருவழியாக இந்தப் படத்தின் மூலம் ஜெயம் ரவியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நினைத்தபடியே கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் அவருடன் ஜோடி போட இருப்பதால் மனுஷன் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறாராம்.