அந்த காமெடியனுக்கு ஹிட் கொடுத்த மாதிரி கதை எடுத்துட்டு வாங்க.. ஆர்டர் போடும் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக உள்ளவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் வசூல் சாதனை படைத்தது. தற்போது சிவகார்த்திகேயனுடன் டான் மற்றும் அயலான் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு படமொன்றில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். யோகி பாபு நடிப்பில் மண்டேலா படத்தை நகைச்சுவையாக எடுத்திருந்தார் மடோனா அஸ்வின். இப்படம் ஓட்டியதில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளார். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தீவிர அரசியல் படமாக எடுக்க வேண்டும் என இயக்குனரிடம் கட்டளை போட்டுள்ளாராம்.

ஏற்கனவே மடோனா அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா படம் தேர்தலை மையப்படுத்தி வெளியாகியிருந்தது. இது ரசிகர் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிபெற்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அடுத்த அரசியல் படத்தை இயக்க உள்ளார் மடோனா அஸ்வின்.

இதற்கான வேளையில் இயக்குனர் இறங்கியுள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அரசியலை மையப்படுத்தி கதை இருக்க வேண்டும் என வலியுறுத்தி சொல்வதால் சிவகார்த்திகேயன் அரசியலில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்சன் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.