ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு முதல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட் என ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்து வெற்றிநடை போட்டு வந்தது யாரடி நீ மோகினி சீரியல். பேய் சீரியஸான யாரடி நீ மோகினியில் விறுவிறுப்பிற்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பட்டது.

இந்த சீரியல் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், யாரடி நீ மோகினி சீரியல் மக்களிடம் மிகவும் நெருக்கமானதும் கூட. ஏனெனில் யாரடி நீ மோகினி சீரியலின் கிளைமாக்ஸ் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் பட்டதாக அமைக்கப்பட்டது.

இந்த சீரியலில் வில்லி ஸ்வேதா கதாபாத்திரத்தில் சையித்திராவிற்கும் மற்றும் பேய் கதாபாத்திரத்தில் சித்ராவாக நடித்த யமுனாவுக்கும் மிக பயங்கரமான சண்டை  ஒன்று  நடக்கும். அந்த சண்டையில் இவர்கள் இருவரும் வானத்தில் சண்டை போடும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த காட்சிகளில் எல்லாம் டூப் நடிக்காமல் இவர்களே ரோபின் உதவியோடு வானத்தில் பறந்து நடித்துள்ளனர். இதுபோன்ற காட்சிகளில் திரைப்படங்களில் உபயோகிக்கும் உயர் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி நடித்துள்ளனர். யாரடி நீ மோகினி கிளைமேக்ஸ் படப்பிடிப்பு

இந்நிலையில் அந்த காட்சிகளை படமாக்க படும் இடத்தில் எடுத்த வீடியோவை அந்த சீரியலில் பேய் கதாபாத்திரத்தில் சித்ராவாக  நடிகை யமுனா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் நடிகை சைத்ரா மற்றும் யமுனா ரோபில் கட்டி, சண்டையிடும் காட்சிகளை காண முடிந்தது. அதனைக் கண்ட ரசிகர்கள் ஒரு சீரியலுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து வானத்தில் ரோப்பில் சண்டையிடும் இவர்கள் இருவரையும் பாராட்டி உள்ளனர்.