அந்தப் பையனை இனி வீட்டுக்குள்ள விடாதே.. கடும் கோபத்தில் ஐஸ்வர்யாவுக்கு கடிவாளம் போட்ட ரஜினி

திருமணமாகி 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெறப்போவதாக அறிவிப்பை வெளியீட்டு சோசியல் மீடியாவை அதிர வைத்தனர். இருப்பினும் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினியும், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இருவரும் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கின்றனர்.

ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன், அவரவர் வேலையில் பிஸியாக உள்ளனர். ஒருபக்கம் ஐஸ்வர்யா ஆல்பத்தில் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் ஒரே ஹோட்டலில் ஹைதராபாத்தில் தங்கியிருந்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் வெவ்வேறு விதமான சூட்டிங்கிற்கு இவர்கள் அந்த ஹோட்டலில் தங்கி இருந்தனர்.

கடந்த வாரம் கூட குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர். அதாவது விவாகரத்து என்பது ஒருபுறம் இருந்தாலும், குழந்தை மீது அக்கறை இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினார்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. எது எப்படியோ தற்போது அனிருத்துடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக கடுப்பில் உள்ளார் ரஜினி.

அவரை இனி வீட்டில் நடத்தக் கூடாது என்பது போன்ற கோபத்தில் உள்ளாராம் ரஜினி. ஐஸ்வர்யா அனிருத்துடன் தான் அதிக நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆகையால் இவர்கள் ஊர் சுற்றுவதை ரஜினியின் நெருங்கிய வட்டாரம் பார்த்துவிட்டு ரஜினியிடம் பாட்டு பாடி இருக்கின்றனர்.

இதனால் கடுப்பான ரஜினி என்னதான் அனிருத் மாமன் மகன் என்றாலும் அனிருத்துடன் பழகுவதை கொஞ்சம் குறைத்துக் கொள் என ஐஸ்வர்யாவை ரஜினி கண்டித்துள்ளார். ஏனென்றால் ரஜினி எப்படியாவது ஐஸ்வர்யாவை தனுஷுடன் சேர்த்துவைக்க திட்டம் போட்டுள்ளாராம்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஐஸ்வர்யா கண்டபடி ஊர் சுற்றுவது ஐஸ்வர்யாவை விட்டு தனுஷ் மேலும் விலகி செல்வதற்கு வழிவகுக்கிறது. இதனால் கடும் கோபத்தில் ரஜினி ஐஸ்வர்யாவை திட்டி தீர்த்து உள்ளாராம்.