அத்துமீறி பேசிவரும் ப்ளூ சட்டை மாறன்.. கிழித்து தொங்கவிடும் அஜித் ரசிகர்கள்

சமீபத்தில் வெளியான வலிமை படத்தைப் பார்த்துவிட்டு பல சினிமா விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர். அதில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். ப்ளூ சட்டை மாறன் எந்த படமாக இருந்தாலும், அந்த படத்தைப் பற்றி அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே வெளிப்படையாக கூறி விடுவார். இதனால் அவருக்கு சில சர்ச்சைகளும், பிரச்சனைகளும் வருவதுண்டு.

ஆனால், அஜித் படம் என்றால் முந்தி அடித்துக் கொண்டு வந்து இஷ்டத்திற்கு வாய்க்கொழுப்பாக பேசிவிடுவார். அப்படி வலிமை படத்தின் விமர்சனத்தை மிகவும் நக்கலாக படத்தை கழுவி ஊற்றி, அளவுக்கு மீறிய பேச்சாக ப்ளூ சட்டை மாறன் கூறியிருந்தார்.

படத்தை விமர்சனம் செய்வது அவரது வேலை அதனால் அதனை செய்தார் என்று இருக்க, அந்த விமர்சனத்திற்கு அஜித் ரசிகர்கள் அவரை திட்ட ஆரம்பித்ததும் தற்போது ஒரு படி மேலே சென்று அவர் பதிலுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேவலமான பல போஸ்ட்களை போட்டு ரசிகர்களை மீண்டும் மீண்டும் சீண்டி வருகிறார்.

அஜித் வலிமை படத்தில் ஆடிய வேற மாதிரி பாடலைப் பார்க்கும் போது புரோட்டாவிற்கு மாவு பிசைவது போல இருக்கிறது என்று கூறி நக்கலாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதேபோல வலிமை படம் விமர்சனம் செய்யும் போதும் அஜித் பார்ப்பதற்கு முகத்தில் தொப்பை விழுந்து சேட்டு போல இருக்கிறார் என்று அவரது உடல் அமைப்பை வைத்து கிண்டலாகப் பேசி இருந்தார்.

இது அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்தமாக சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையானது. ஒரு நடிகரை பாடி ஷேமிங் செய்வது தான் விமர்சனமா, எதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்று பல முனைகளில் இருந்தும் ப்ளூ சட்டை மாறன்க்கு எதிர்ப்பலைகள் கிளம்பியது. அதற்காக அஜித் ரசிகர்கள் இவரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர். இப்படி இருக்கையில் சேட்டை அடங்காத ப்ளூ சட்டை மாறன் மீண்டும் தனது பக்கத்தில் அஜித் ரசிகர்களை வம்பு இழுக்கும் விதமாக ஒரு போஸ்ட்டை போட்டிருக்கிறார்.

அதில் பாடி ஷேமிங் நான் செய்கிறேனா இல்லை அஜித் செய்கிறாரா என்று சொல்வது போல அஜித்தின் பழைய படமான ரெட் படத்தில் வந்த ஒரு பாடலை மேற்கோள் காட்டி , ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்று ஹீரோயினை ஒல்லியாக இருக்கிறார் என்று சித்தரிப்பதும் பழுத்தாச்சு நெஞ்சாம்பழம் பழுத்தாச்சு என்று வரும் வரிகள் பெண்ணின் மார்பகத்தை காமவெறியுடன் பார்க்கும் ஒருவனால் மட்டுமே இப்படி எழுதமுடியும், அதில் நடிக்கவும் முடியும், இவ்வளவு கேவலமான வரிகளை எழுதி அதில் நடித்த அஜித் ஆணாதிக்க மனோபாவத்தை இந்தப் பாடல் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் உருவ கேலி நான் செய்யவில்லை அவர்கள் தான் செய்து இருக்கின்றனர்.

இந்த மாதிரி வசனம் எழுதுபவர்கள், பாடல் எழுதுவோரை திராணி இருந்தால் அவர்களை கண்டியுங்கள் இல்லாவிட்டால் மூடிக்கொண்டு இருங்கள் என்று உச்சகட்ட திமிரில் போஸ்ட் போட்டிருக்கிறார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் கொந்தளித்து இருக்கின்றனர். சமூகவலைதளத்தில் மிகவும் வேகமாக இந்த போஸ்ட்டை பகிர்ந்து வருகின்றனர். அது ஏன் அஜித் படம் என்றால் மட்டும் ப்ளூ சட்டை மாறன் இவ்வளவு தரக்குறைவாக நடந்து கொள்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

ஒருவரின் உருவத்தை கேலி செய்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தன்னை நியாயப்படுத்தி கொள்ள, இப்படி பழைய பாடல்களில் வந்த வரிகளை வரிந்துகட்டி கொண்டு வந்து ஒரு நடிகரின் பெயரை கெடுக்க வேண்டுமா என்று சமூக வலைத்தளத்தில் ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்பலைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. விமர்சனம் செய்வதை தனது வேலையாக வைத்துக்கொண்டு வம்பிழுப்பதை தனது சைடு பிசினஸ் ஆக செய்து வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிக்கொண்டே தான் செல்கிறது.