அதையே நினைத்து உருகும் கேப்ரில்லா.. அழுகாச்சி சீரியலாகவே மாறிய ஈரமான ரோஜா

விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கப்பட்ட ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் ஆனது தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் உருக்கமாக காதலித்த காதல் ஜோடியை பிரித்து, திருமணம் ஆக இருந்த ஜோடிகளையும் பிரித்து, பிடிக்காத இரண்டு ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது.

இன்னிலையில் கேப்ரில்லா நடிக்கும் திவ்யா கதாபாத்திரம் ஆனது உருக உருக ஜீவாவை காதலித்து, தற்போது அக்கா திருமணம் செய்து கொள்ள இருந்த பார்த்திபனுடன் கட்டாயத்தின் பேரில் கல்யாணம் நடந்திருக்கிறது.

இதனால் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த கேப்ரில்லா இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு, காதலனின் அண்ணனுக்கு மனைவியாக இருப்பதை தாங்கிக் கொள்ளாமல் நாளுக்குநாள் அழுதுகொண்டே இருக்கிறாள். இந்த விஷயம் திவ்யாவின் அம்மாவிற்கு தெரிய, குற்றம் உணர்ச்சியில் துடித்தார்.

தற்போது மறு வீட்டிற்கு வரப்போகும் திவ்யாவை அவளுடைய அம்மா எப்படி முகத்துக்கு நேராக சந்தித்து சமாதானப்படுத்தபோகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அத்துடன் திருமணம் ஆக இருந்த திவ்யாவின் அக்கா பிரியாவிற்கு ஜீவா உடன் திருமணம் நடந்ததால், அதை பிரியா பெரிதுபடுத்தாமல் ஜீவாவுடன் சேர்ந்து வாழும் முடிவை எடுத்துவிட்டாள்.

ஆனால் திவ்யா மட்டும் தன்னுடைய காதலனை நினைத்து கொண்டே அழுது துடிதுடிப்பதுடன் ஐபிஎஸ் கனவும் சுக்குநூறானதே என மனம் வருந்தி கொண்டிருக்கிறாள். ஆகையால் திவ்யாவின் கனவை அவளுடைய கணவர் பார்த்திபனுக்கு தெரியவர, அவனே பொறுப்பெடுத்து திவ்யாவை மேற்கொண்டு படிக்க வைத்து திவ்யாவின் மனதை கவர போகிறான்.

அதன்பிறகு இரண்டு ஜோடிகளும் கணவர் மனைவிகளாக சந்தோசமாக வாழ துவங்க போகின்றனர். ஆனால் அதுவரை ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் அழுகாச்சி சீரியலாகவே இருக்கப்போகிறது.