அது எதுக்குங்க என ஒதுங்கும் லோகேஷ் கனகராஜ்.. மனுஷன் கமல்னா மட்டும் கொஞ்சம் யோசிக்கணும்

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் வித்தியாசமான கதைக்களத்தை வைத்து படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கியவிதத்தை பலரும் பாராட்டி இருந்தனர். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்தார்.

பின்பு கார்த்திக் வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு  இரவு நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் பாடல் காட்சிகளும், எந்த ஒரு ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெறாமல் ஹாலிவுட் படம் போல் வெறும் கதைக்களத்தை மட்டுமே மையமாக வைத்து படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கார்த்தியின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக பார்க்கப்படும் அளவிற்கு பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தமிழ் இயக்குனர்கள் பலரும் 4 பாடல் காட்சிகள், 2 முத்தக் காட்சிகள் என படத்தில் ஆபாசம் நிறைந்த ஒரு சில காட்சிகளை வைப்பார்கள். சமீபத்தில் கூட வெங்கட்பிரபு எடுத்த மன்மதலீலை முழுக்க முழுக்க முத்தக்காட்சியை மையமாகக் கொண்டு வெளியானது. இதனை பார்த்த பல ரசிகர்களும் வெங்கட்பிரபு கூட மாறி விட்டாரா என சமூக வலைதளங்களில் கிண்டலாக கூறி வந்தனர்.

தற்போது லோகேஷ் கனகராஜ் தனது குருவான கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் இப்படத்திலும் பாடல் காட்சிகள் எதுவும் இடம்பெறாமல் முழுக்க முழுக்க கதைக்களத்தை வைத்து படம் இயக்கி உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

தற்போது சினிமா என்றாலே ஆபாச வசனங்கள் அதிக ரொமான்ஸ் காட்சிகள் என்பது போல் மாறி விட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களிலேயே எதுவுமே பெரிய அளவில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருக்காது. ஆனால் மறைமுகமாக ஒரு சில விஷயங்களை வெளிப்படையாக கூறுவது போல் இடம்பெற்றிருக்கும். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் கதையிலும் காட்சிக்கு காட்சி வித்தியாசமாக இருக்கும். இதனால் ரசிகர்களும் லோகேஷ் கனகராஜ் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. மேலும் ஒரு சில ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் போல் பாடல் காட்சிகளில் இல்லாமல் ஆபாச வசனங்கள் இல்லாமல் படங்களை இயக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.