அதிர்ச்சி அளித்த விஜே சித்ராவின் மறுபக்கம்.. வெளிவந்த பல திடுக்கிடும் உண்மைகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜே சித்ரா. இவர் பல வருடங்களாக சீரியல்களில் நடித்து வந்தாலும் இந்த முல்லை கதாபாத்திரம் தான் அவரை ரசிகர்களிடையே அதிக பிரபலம் ஆக்கியது.

அதிலிருந்து சித்ராவை தங்கள் வீட்டு பெண்ணாகவே ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தனர். அவருடைய துரு துரு பேச்சும், குழந்தைத்தனமான நடவடிக்கையும் பலருக்கும் பிடித்தது. இந்நிலையில் தான் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது சின்னத்திரை வட்டாரம் உட்பட அனைவருக்கும் பலத்த அதிர்ச்சியை கொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவருடைய கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமினில் வெளி வந்துள்ள அவருடைய கணவர், சித்ராவை பற்றி பல உண்மைகளை கூறி வருகிறார்.

சித்ராவின் மரணம் தற்கொலை இல்லை என்று ரசிகர்கள் சந்தேகப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருடைய கணவர் சித்ராவிற்கு முன்னாள் எம்எல்ஏ மற்றும் அமைச்சருடன் தொடர்பு இருந்ததாக கூறி உள்ளார். அவர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

இந்நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக ஆரம்பம் முதலே பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்த ரேகா நாயர் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். அதாவது சித்ரா நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி நல்லவ கிடையாது.

சித்ராவும் அவருடைய கணவரும் தங்கியிருந்த வீட்டில் நிறைய காண்டம் இருந்ததை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். சித்ராவுக்கு முன்னாள் எம்எல்ஏ ஒருவருடன் தொடர்பு இருந்தது உண்மைதான் என்று அவர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சித்ராவுக்கு மதுபழக்கம் உட்பட நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்ததாகவும், அவருடைய உடலை முழுதாக பரிசோதனை செய்து இருந்தால் பல உண்மைகள் வெளிவந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது ரேகா நாயர் கூறியிருக்கும் இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.