தமிழில் ஒரு காலத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த நடிகர்கள் தற்போது வெற்றி கொடுக்க தடுமாறி வரும் நிலையில் அனைவரும் தஞ்சம் அடைவது சுந்தர் சி இடம் தான் என்கிறது சினிமா வட்டாரம். அவரும் நிறைய காமெடி காட்சிகளை வைத்து மினிமம் கேரண்டி படத்தையாவது கொடுத்து விடுகிறார்.

இருந்தாலும் சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 3 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதுமட்டுமில்லாமல் சுந்தர் சி தற்போது ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுப்பாரா என்ற சந்தேகம் நிலவிய நிலையில் மீண்டும் இயக்குனராக ஒரு ஜாலியான படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார் சுந்தர் சி.

அதே நேரத்தில் நீண்ட நாட்களாக வெற்றி கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நடிகர் ஜீவா அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராசிகன்னா நடிக்க உள்ளாராம்.

ஜீவாவும் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்து விடலாம் என முட்டிமோதி பார்க்கிறார். ஆனால் எதுவும் நடந்த பாடில்லை. போதாக்குறைக்கு நடித்த படங்களும் ரிலீஸ் ஆக முடியாமல் தடுமாறுகின்றனர். இப்படியே போனால் கேரியர் காலியாகி விடும் என்பதை உணர்ந்த ஜீவா தனக்கே உரிய பாணியில் ஜாலியான பாணியில் சுந்தர் சியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

சுந்தர் சி மற்றும் ஜீவா ஆகிய இருவரும் இணைந்து ஏற்கனவே கலகலப்பு2 என்ற படத்தில் பணியாற்றி இருந்தனர். கலகலப்பு 2 திரைப்படம் திரையரங்குகளுக்கு நல்ல லாபகரமான படமாக அமைந்ததால் இவர்கள் இணையும் புதிய படத்திற்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு உள்ளது என்பது உண்மைதான். பொறுத்திருந்து பார்ப்போம் வழக்கம்போல் ஒரு நல்ல காமெடி படம் வருகிறதா என்று.