



சன் பிக்ச்சர்ஸ் – ரஜனி கூட்டணியில் தீபாவளி சரவெடி தான் அண்ணாத்த. இயக்குனர் சிவா தனக்கே உரிய கமெர்ஷியல் பாணியில் படத்தை இயக்கியுள்ளார் என்பது ட்ரைலர் பார்த்த பின்பு அனைவருக்கும் புரிந்துவிட்டது. இமானின் இசை, வெற்றியின் ஒளிப்பதிவு, ரூபனின் எடிட்டிங் என அனைத்துமே கனகச்சிதம் தான்.
இன்று காலை முதலே காட்சிகள் துவங்கி விட்டது. மழை மற்றும் கொரானா சூழல் காரணமாக அதிகளவு பரபரப்பை சென்னை வட்டாரங்களில் பார்க்கமுடியவில்லை என்கின்றனர். மாஸ் படம் தான் எனினும் இத்தனை நடிகர், நடிகையர் பட்டாளத்தை எப்படி இயக்குனர் உபயோகப்படுத்தி இருப்பார் என்பதனை தெரிந்துகொள்ள நமக்கும் அதிக ஆர்வம் தான்.
தலைவரின் என்ட்ரி மாஸாக உள்ளதாம், முதல் பாதி மிக ஸ்லோ என்கின்றனர், எனினும் இன்டெர்வல் ப்ளாக் கனகச்சிதமாம்.
இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது என்கின்றனர். வேதாளம் மற்றும் விஸ்வாசம் சாயல் பல இடங்களில் பளீச் என தெரிகிறதாம்.
காமெடி, ஆக்ஷன், எமோஷன் என கலவையாக பண்டிகை முன்னிட்டு வெளியாகி உள்ள படமே அண்ணாத்த.
ரஜனி என்ற ஒருவருக்காக திரையரங்கம் சென்று ரசித்து வர, பண்டிகை நாளில் ரிலீஸ் ஆகியுள்ள கமெர்ஷியல் மசாலா படமே அண்ணாத்த.