அண்ணாத்த படத்தை பார்த்த ரஜினி.. ஷாக் ஆகி, உடனே சிவாவுக்கு போனை போட்ட சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்த தர்பார் படம் பல இடங்களில் பலருக்கு வெற்றி . எனவே அடுத்த படம் நிச்சயம் அனைவருக்கும் வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது முதன் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி அண்ணாத்த படத்தில் கூட்டணி அமைத்துள்ளார்.

முதன்முறையாக ரஜினியுடன், சிறுத்தை சிவா கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தை வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியையொட்டி உலகளவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

எனவே அண்ணாத்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளதால் நிச்சயம் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான விசுவாசம் படத்தில் இமான் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் தேசிய விருதையும் தட்டிச் சென்றது. அதனால் அண்ணாத்த படத்திலும் இதுபோன்று பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் காப்பியை நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குனர் சிறுத்தை சிவா போட்டு காண்பித்துள்ளார். அதனை பார்த்த ரஜினிகாந்த், ‘வாவ் செம! உண்மைலேயே எதிர்பார்த்த விட ஷாக்காகி சந்தோசமாம். அனைத்து தரப்பு ரசிகர்களையும் அண்ணாத்த உணர்வுபூர்வமாக இணைத்து விடும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இருக்கும்’ என சொல்லிட்டு போய்டாராம். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அது மட்டும் இல்ல உடனே நைட் சிவாவுக்கு போனை போட்டு அடுத்து ஒரு கதையும் கேட்டு இருக்கிறாராம் ரஜினி.

முழுக்க முழுக்க கிராமத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள அண்ணாத்த படம் நிச்சயம் குடும்ப ரசிகர்களை திரையரங்குக்கு வர வைக்கும் என இயக்குனர் சிவா மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அதற்கேற்றார் போல் இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, சதீஷ், சூரி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.