அண்ணாத்த படத்தில் தங்கமாக நடிக்க கீர்த்தி வாங்கிய சம்பளம்.. இனி ஹீரோயினாக பார்க்க முடியாதா.!

ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக சூப்பர் ஸ்டாருக்கு தங்கச்சியாக நடித்து வரவேற்பு பெற்று வருகிறார். சமீபத்தில் இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளது.

அதற்கு காரணம் படத்தின் ஒருசில காட்சிகள் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை பாசமும், அன்பும் மட்டுமே படத்தில் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளது. காமெடி காட்சிகள் எதுவுமே ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனதால் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வசூலில் சாதனை பண்ண வேண்டும் படத்தினை பல வழியில் புரமோஷன் செய்து வருகிறது.

சமீபத்தில் கூட அண்ணாத்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் சிவா இருவரும் மற்றொரு படத்தில் இணைய இருப்பதாகவும் புதிய தகவல் வெளியானது.

தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இது ரஜினி ரசிகர்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்தது. ஆனால் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தங்கச்சியாக நடிப்பதற்கு 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் படத்திற்கு கூட இவ்வளவு சம்பளம் வாங்கியது கிடையாது.

ஆனால் தங்கச்சி கதாபாத்திரத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது கீர்த்தி சுரேஷிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் மட்டுமே இவருக்கு 2 கோடி சம்பளம் கொடுத்ததாக சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இனி வரும் படங்களில் கீர்த்தி சுரேஷ் தங்கச்சி கதாபாத்திரத்தில் அதிகமாக நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றதாம். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷை பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் ஒருபுறம் ஏங்கி தான் வருகின்றனர்.