அண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா.. இடையில் நுழைந்த நடிகையால் ஏற்பட்ட குழப்பம்

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந்தை வைத்து டைரக்டர் சிவா படத்தில் தேவையான அனைத்து காட்சிகளும் எடுத்துள்ளதால் தற்போது படக்குழு மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்திற்கு ஸ்டெப் தங்கச்சியாக நடித்திருப்பதாகவும் மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என பலரும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் பாசத்தை பொழிந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா சரியாக திட்டமிட்டு படத்திற்கு தேவையான காட்சிகளை குறைந்த நேரத்திலேயே எடுத்து விட்டதாகவும். இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் அளவில் பொருட்செலவு ஏற்படவில்லை என்பதால் அண்ணாத்த படத்தின் தயாரிப்பாளர் டைரக்டர் சிவாவை கூப்பிட்டு பாராட்டியுள்ளார்.

அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள சிவா நயன்தாராவிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று செய்திகள் சுற்றியது. படத்தில் ஒரு சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளில் மட்டுமே நடிக்க வைத்துள்ளார். இதனால் அண்ணாத்த படம் வெளியானால் நயன்தாராவிற்கான வரவேற்பு குறையும் என்பதால் இயக்குனர் சிவா மீது நயன்தாரா கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் இடம் பெற்றதால்தான் நயன்தாராவிற்கான காட்சிகளும் குறைந்தது என தெரிகிறது. இதனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கீர்த்தி சுரேஷ் காட்சிகள் மிகவும் முக்கியமாம் அதனால்தான் அவரது காட்சிகள் அதிகமா இருக்குமாம்.