அண்ணாத்த படத்தால் காணாமல் போன விஷால் படம்.. போட்டி போடறேன்னு மொத்தமும் காலி

ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பல படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த படம் வெளியாக உள்ளதால் பல படங்கள் போட்டியில் இருந்து விலகியது.

அந்த வரிசையில் நடிகர் அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதேபோல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் தள்ளி சென்றது. இறுதியாக ரஜினியுடன் மோத சிம்பு தயாராக இருந்த நிலையில் சில காரணங்களால் அவரின் மாநாடு படமும் நவம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளி சென்று விட்டது.

தற்போது தீபாவளி ரேசில் ரஜினியின் அண்ணாத்த மற்றும் விஷால் ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள எனிமி ஆகிய இரண்டு படங்கள் தான் உள்ளன. பொதுவாகவே ரஜினி படத்துடன் மோதுவதற்கு மற்ற ஹீரோக்கள் யோசிப்பார்கள். ஆனால் விஷால் தைரியமாக தீபாவளிக்கு ரஜினியுடன் மோத முடிவு செய்து படத்தை வெளியிட உள்ளார்.

தற்போது இரண்டு படங்களுக்குமான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் அண்ணாத்த படம் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல்லாக உள்ளது. ஆனால் எனிமி படத்திற்கு ஒரு ஷோவில் முழுதாக 20 டிக்கெட்டுகள் கூட புக் ஆகவில்லையாம். இதனால் எனிமி படத்தை எடுத்த தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நிச்சயமாக பெரும்பாலான ரசிகர்கள் ரஜினி படத்தை தான் தேர்வு செய்வார்கள். ஒருவேளை ரஜினி படத்திற்கு டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் வேண்டுமானால் எனிமி படத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அதுவும் உறுதியாக கூற முடியாது. விஷால் சற்று பொறுமையாக அல்லது சற்று முன்னதாக அவர் படத்தை வெளியிட்டு இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஜெய்பீமில் நடித்த 6 பிரபலகளின் சம்பளம்.. ரீ-என்ட்ரி கொடுத்து கோடியில் வாங்கிய பிரகாஷ்ராஜ்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். பழங்குடியினர் வாழ்க்கை முறையைப் பற்றியும், அவர்களுக்கு நடந்த அநீதியைப் பற்றி உண்மை சம்பவமாக எடுக்கப்பட்ட கதை ...