அண்ணாத்த திரை விமர்சனம்.. கடைசில படம் எப்படிதான் இருக்கு?

ஆரம்பத்தில் விஸ்வாசம் படத்திற்கு வந்த விமர்சனங்கள்தான் தற்பொழுது அண்ணாத்த படத்திற்கும் வந்துள்ளது. விஸ்வாசம் படத்தை முதல் நாள் பார்த்துவிட்டு சிவா, நல்லா அஜித்தை வைத்து செஞ்சிவிட்டார். படம் ஸ்லோவாக போகிறது சென்டிமென்ட் ஓவரா இருக்கிறது என்ற ரீதியில் விமர்சனங்கள் ஆரம்பத்தில் பரவியது.

ஆனால் சில நாட்கள் கழித்து ஒரே பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகள், கண்ணான கண்ணே பாடல் போன்ற முக்கியமான காட்சிகள் மூலம் விசுவாசம் படம் வெற்றியின் உச்சத்திற்கு சென்றது.

அதைப் போலவே அண்ணாத்த படத்திற்கும் முதல் நாளில் நெகட்டிவ் விமர்சனங்களை பலர் முன்வைத்தனர். படம் நல்லா இல்லை என்ற விமர்சனங்கள் கேட்டுவிட்டு படம் பார்த்தால் நல்லா இல்லாத மாதிரியே இருக்கும். அதையும் மீறி படம் நல்லா இருக்குனு சொல்லிட்டா அவனை ரசனை இல்லாதவன் என்று ஒதுக்கிவிடுவார்கள்.

அண்ணாத்த படத்தின் முதல் பாதியில் வரும் குஷ்பு, மீனா காட்சிகளை குறைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்கள் என்ற செய்தியும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதுதான் சிவாவின் டெக்னிக். ஆனால் இரண்டாம் பாதியின் நீளத்தை கண்டிப்பாக குறைத்திருக்க வேண்டும். சீரியலில் கொடுக்கப்படும் ட்விஸ்ட் போல ரொம்ப ஸ்லோ மோஷனில் எடுத்துவிட்டார் சிவா.

இண்டர்வல் காட்சிக்கு பின் நீளமாக சற்று சொதப்பியது உண்மைதான். ஆனால் தியேட்டரில் உக்கார முடியாத அளவு மொக்கை இல்லையே. சென்டிமெண்ட் காட்சிகளில் நன்றாகவே படம் எடுத்திருப்பதாக சிவா தரப்பில் கூறுகிறார்கள்.

விஸ்வாசம் படத்துடன் எதற்காக அண்ணாத்த படத்தின் விமர்சனங்களை சேர்த்து வைத்து பேச வேண்டும் என்றால், ஆரம்ப காட்சிகளில் ஆரம்பித்து கடைசி காட்சி வரை விஸ்வாசம் படத்தில் இருக்கும் ஸ்டைல் தான். அது ரஜினிக்கே தெரியும் சூப்பர் ஸ்டார் கேட்டதும் எதிர்பார்த்ததும் அதேதான். ரஜினி நடித்த இத்தனை படங்களில் விஸ்வாசம் படத்தில் வரும் கிராமத்து காட்சிகள், செண்டிமெண்ட் போன்று நடித்தது இல்லை. இன்று சாத்தியமானது.

எது எப்படியோ அண்ணாத்த படத்தை பார்ப்பவர்கள் கேட்பவர்கள் என அண்ணாத்த திருவிழாதான் இந்த தீபாவளி. ரஜினியை திரையில் காண வேண்டுமென்றால் இன்னும் ஒரு சில படங்கள் மட்டும்தான் அதன்பின் ரஜினி நடிப்பாரா என்று அவருக்கு தான் தெரியும். அதனை மனதில் வைத்தே ரஜினி ரசிகர்கள் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். ஒரு படத்தின் வெற்றியை உறுதி செய்வது வசூல் என்றால் கண்டிப்பாக அண்ணாத்த பிளாக் பஸ்டர். அப்படி இல்லை என்றால் படம் சுமார்.

சினிமாபேட்டை ரேட்டிங்: 2.75 / 5

சினிமாபேட்டை வெர்டிக்ட்: இது ரஜினி படம், பார்ப்பதற்கு அதுவே போதும்

கல்யாணம் பண்ணிக்க சொல்லி அடம் பிடித்த நடிகர்.. விரட்டியடித்த சன் டிவி சீரியல் நடிகை

சன் டிவியில் அண்ணாமலை சீரியலில் ரேவதி கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் அந்த நடிகை. அதன் பிறகு சன் டிவியில் பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். சன் ...