அண்ணாத்த ஆடியோ லான்ச் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்ல.. காரணம் இந்த விஷயம் தான்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தை தீபாவளியன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் தற்போது தொடர்ந்து படத்தினைப் பற்றிய வீடியோக்களும் புகைப் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்த்துக் ஏற்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான அண்ணாத்த அண்ணாத்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இன்று சார காற்று என்ற பாடலையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எப்போதுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் பாடல்களை வெளியிடாமல் பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் மூலம் தான் பாடல்களை வெளியிடுவார்கள்.

ஆனால் அண்ணாத்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஒவ்வொன்றாக படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதனை பார்க்கும் போது அண்ணாத்த படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என பலரும் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் எப்போதுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தான் ஆடியோ லான்ச் வெளியிடுவார்கள் மேலும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆனால் ஊரடங்கு காரணமாக பெரிய அளவில் ரசிகர்களை அனுமதிக்க முடியாது. இவ்வளவு பிரமாண்டமாக ஆடியோ லான்ச் வெளியிட்டும் ரசிகர்கள் குறைவாக இருந்தால் அது சரியாக இருக்காது என்பதற்காக தான் தற்போது படக்குழுவினர் தொடர்ந்து தங்களது படத்தின் பாடல்களை வெளியிட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை வெளியிட்ட படக்குழு தீபாவளி வருவதற்கு முன்பு அனைத்து பாடல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு விடுவார்கள் என கூறி வருகின்றனர். ஆனால் தற்போது ரஜினி ரசிகர்கள் என்னதான் பாடல்கள் வெளியிட்டாலும் ஆடியோ லான்ச் நடத்தினால்தான் பெருமையாக இருக்கும் என கூறி வருகின்றனர்.