தீபாவளி அன்று ரஜினி நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாவதால் தீபாவளி ரேசில் இருந்து பல படங்கள் பின்வாங்கியது. இருப்பினும் நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் என்பது போல பிடிவாதமாக விஷால் அவரது எனிமி படத்தை அண்ணாத்த படத்திற்கு போட்டியாக வெளியிட்டார்.

அவர் வெளியிட்டதன் பலன் கிடைத்ததா? எனிமி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? படம் குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் என்ன கூறியுள்ளார்கள் என்பதை தான் நாம் பார்க்க போகிறோம். முதலில் படத்தின் கதையை பார்க்கலாம்.

கதைப்படி தன் மகனை போலீஸ் அதிகாரியாக்குவதற்காக சிறுவயது முதலே பயிற்சியளிக்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி பிரகாஷ்ராஜ். தன் மகனைவிட பக்கத்து வீட்டு பையன் திறமையாக இருப்பதால் அவனுக்கும் சேர்த்து பயிற்சி அளிக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் பிரகாஷ் இறந்துவிட சிறுவர்களின் வாழ்க்கை என்ன ஆனது. வெவ்வேறு திசையில் சென்ற இருவரும் பின்னாளில் சந்தித்து கொள்ளும் போது அவர்களுக்கு இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் படத்தின் கதை.

பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ஆர்யா, விஷால் என அனைவரும் அவர்கள் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள். ஆர்யாவும், விஷாலும் அவன் இவன் படத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப எனிமி படமும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றே கூற வேண்டும்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள எனிமி படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் கமெண்ட்களையே பெற்றுள்ளது. படம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அண்ணாத்த படத்துடன் ஒப்பிடும்போது எனிமி படம் பரவாயில்லை ரகம் தான் பார்க்கலாம்.