அண்ணனை தூக்கி எறிந்த தம்பி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அதிரடி திருப்பம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் கூட்டு குடும்ப கதை அம்சத்தை கொண்டிருப்பதால் இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் இந்த சீரியலில் இரண்டாவது தம்பி ஜீவாவை அவருடைய வீட்டில் இருந்து பிரித்து வீட்டோட மாப்பிள்ளையாக ஆக்கவேண்டும் என ஜீவாவின் மாமனார் திட்டம் தீட்டுகிறான்.

இதற்காக இருதய அறுவை சிகிச்சை ஏற்பட்ட ஜீவாவின் மாமனாருக்கு உதவி செய்ய வேண்டும் என மூர்த்தி ஜீவாவை இனி கடைக்கு வரவேண்டாம் என கடுமையாக திட்டுகிறார். இதனால் மனவருத்தம் ஏற்பட்ட ஜீவா மூக்கு முட்ட குடித்துவிட்டு தள்ளாடிய நிலையில் வீட்டிற்கு வருகிறான்.

வந்து தன்னுடைய அண்ணன் மூர்த்தியை கைநீட்டி பேசியதுடன் கடைக்கு வரவேண்டாம் என அண்ணன் சொன்ன ஒரே காரணத்திற்காக தான் நான் குடிக்கிறேன் என வீட்டில் இருப்பவர்களிடம் கத்துகிறான். இதன்பிறகு ஜீவா ஏற்கனவே ஒரு முறை குடித்ததும் மட்டுமல்லாமல் அதை தொடர்ந்து செய்வது வீட்டில் இருப்பவர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறான்.

மேலும் ஜீவா தன்னுடைய மாமனார் வீட்டிற்கும், அவருடைய கடைக்கும் செல்வதை துளிகூட விரும்பாமல் ஜீவா, ஏதோ ஒரு கட்டாயத்திற்காக அதை செய்வது அப்பட்டமாக தெரிகிறது. இது எவ்வளவு நாள் தான் என புலம்பித் தவிக்கும் ஜீவாவின் நிலை பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது.

இருப்பினும் ஜீவாவின் உணர்வை புரிந்து கொள்ளாத மூர்த்தி அடிக்கடி திட்டுவதும் அவருடைய மாமனாருக்கு சாதகமாகப் பேசுவதும் ஜீவா இந்த குடும்பத்தை விட்டு விலகுவதற்கு வாய்ப்பை உண்டுபண்ண போகிறது.

அத்துடன் ஒரே வீட்டில் பத்துபேர் இருக்கிற கட்டாயத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் தற்சமயம் ரூம் பிரச்சினையும் ஏற்படுவதால் ஜீவா தன்னுடைய மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.