அண்ணனையே இழுத்தடித்த தம்பி.. செல்வராகவனிடம் கறாராக பேசிய தனுஷ்

தனுஷ் அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நானே வருவேன் படத்தின் மூலம் இணைந்துள்ளது.

இப்படத்தை கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் தனுஷ், செல்வராகவன் இருவரும் படங்களில் பிஸியாக இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இடமே கறாராக பேசி உள்ளார். தற்போது தனுஷ் முன்னணி நடிகராக வலம் வருவதற்கு அவருடைய அண்ணன் செல்வராகவன் முக்கிய காரணம். ஆனால் நானே வருவேன் படத்தை தனுஷ் இழுத்தடித்து உள்ளார்.

அதற்கு காரணம் நானே வருவேன் படத்தின் ஸ்கிரிப்டை செல்வராகவன் முழுமையாக தரவில்லையாம். அதன் பிறகு முழு ஸ்கிரிப்டும் வேண்டும் என்று சண்டை போட்டு வாங்கி படித்த பிறகு தான் தனுஷ் நானே வருவேன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்தில் பிஸியாக உள்ளதாகவும் அதன் பிறகுதான் நானே வருவேன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இவ்வாறு சொந்த அண்ணனையே இழுத்து அடித்துள்ளார் தனுஷ். தற்போது நானே வருவேன் படத்திற்கான ஷூட்டிங் ஒரே கட்டமாக நடந்து வருகிறது.

நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக இந்துஜா ரவிசந்திரன், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் கம்போசிங் வேலைகளை கடந்த வாரத்தில் யுவன் சங்கர் ராஜா முடித்துள்ளார்.