அட்லீ படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாகும் பாகுபலி பட நடிகர்.. படம் சும்மா தாறுமாறு தான்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி படங்களை வழங்கிய இயக்குனர் அட்லி தற்போது இந்தி சினிமாவில் இயக்குனராக கால் பதித்துள்ளார். அதுவும் முதல் படமே பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்க உள்ளார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இப்படம் குறித்த புதிய அறிவிப்புகள் தினமும் வெளியாகி ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் இரண்டாவது முறையாக காமெடி நடிகர் யோகிபாபு, ஷாருக்கானுடன் இணைந்து உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படத்தில் மேலும் ஒரு பிரபல தென்னிந்திய நடிகர் இணைந்துள்ளார்.

ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு ஜவான் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளாராம். அதில் ஒருவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும், மற்றொருவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியாமணியும் நடிக்க உள்ளார்களாம்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் ராணா கொடூரமான வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். தற்போது அட்லி படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க ராணா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர ஜவான் படத்திற்கு இரண்டு பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்த உள்ளனர். அந்த வரிசையில் படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானும், பேக்கிரவுண்ட் மியூசிக்கை அனிருத்தும் இசையமைக்கிறார்கள். பான் இந்தியா படமாக தயாராகி வரும் ஜவான் படம் ஒரே சமயத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் உருவாகி வருகிறதாம். எனவேதான் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பல நடிகர்களை இப்படத்தில் அட்லி நடிக்க வைத்து வருகிறாராம்.