அட்லி, ஷாருக்கான் கூட்டணி முறிந்ததா.? புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி

அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக பல மாதங்களாக அட்லீ மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது லயன் படத்தின் புகைப்படங்கள் கசிந்துள்ளது. ஷாருக்கான் முகம் தாவணியால் மூடப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் அட்லீயின் படத்தில் ஷாருக்கானின் தோற்றம் இது என உறுதி செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் நேற்று வியாழன் மாலை மும்பையில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டுள்ளது .

இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. அதில் வில்லனாக உள்ள ஷாருக்கானை தான் நயன்தாரா காதலிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது நயன்தாரா மும்பை சென்றுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

நயன்தாராவுக்கு ஒரு வாரம் மும்பையில் படப்பிடிப்பு உள்ளது. மேலும், இப்படத்தில் ராணா டகுபதியும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லயன் படத்தில் சன்யா மல்ஹோத்ரா மற்றும் சுனில் குரோவர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

மேலும், ஷாருக்கான் பதான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஷாருக்கானுக்கு ஜீரோ படம் வெளியானது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பதான் படம் வெளியாகிறது.

இந்நிலையில் லயன் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும், ஷாருக்கானின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.