அட்டை காப்பி அடித்து சர்ச்சையான போஸ்டர்.. படக்குழு மீது கொலவெறியில் யோகி பாபு

தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரே ஒரு காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு மட்டுமே. அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் யோகிபாபுவுக்கு நிச்சயம் ஒரு கதாபாத்திரம் கொடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு இவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. காமெடியனாக மட்டுமில்லாமல் காமெடி படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் யோகி பாபு நடித்து வருகிறார்.

அந்த வகையில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஜாம்பி, கூர்கா, மண்டேலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இவரது டைமிங் காமெடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதால் யோகி பாபுவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பேய் மாமா எனும் படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படி ஒரு படம் உருவாவதே தமிழ் சினிமாவில் பலருக்கும் தெரியாது. சத்தமில்லாமல் முழு படத்தையும் எடுத்து முடித்து விட்டார்கள். இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மேனன் நடித்துள்ளார். இவர்கள் தவிர எம்.எஸ் பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இப்படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. வரும் செப்டம்பர் 24ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் கடந்த 2020ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பூட் எனும் படத்தின் போஸ்டரை அப்படியே காப்பி அடித்து வெளியிட்டு உள்ளனர். போஸ்டரையே காப்பியடித்தவர்கள் கதையை மட்டும் சொந்தமாகவா யோசித்திருப்பார்கள்? என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

யோகி பாபு தற்போது விஜய்யின் பீஸ்ட், ஆர்.ஜே.பாலாஜியுடன் வீட்ல விசேஷங்க, அட்லி – ஷாரூக்கான் இணையும் பாலிவுட் படம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள பேய் மாமா படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.