அட்ஜஸ்ட் பண்ணி இருந்தா, எப்போவோ பெரிய லெவலுக்கு போயிருக்கலாம்.. சர்வைவரில் சர்ச்சையை கிளப்பிய விஜே பார்வதி!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்களும், தற்போது 2 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள போட்டியாளர்களை காடர்கள், வேடர்களின் என இரண்டு அணிகளாக பிடிக்கப்பட்டு சவால் நிறைந்த போட்டிகளை கொடுக்கின்றனர்.

இதில் யார் கடைசி வரை 90 நாட்களுக்கு தாக்குப் பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இதில் இதுவரை ஸ்ருஷ்டி டாங்கே, இந்திரஜா ஆகிய இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக விஜே பார்வதி சர்வைவல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே தன்னை திறமையான பெண் என்பதை காட்டிக்கொள்ள அனைத்து விஷயங்களிலும் சக போட்டியாளர்களை கடுப்பேற்றி கொண்டிருந்தார்.

அத்துடன் சர்வைவல் போட்டியாளர்களுக்கும் விஜே பார்வதிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதும் உண்டு. தற்போது மூன்றாம் உலகத்தில் இருக்கும் விஜே பார்வதி மற்றும் காயத்ரி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏனென்றால் இதில் விஜே பார்வதி, மீடியாவில் இருப்பவர்களை ரசிகர்கள் முகத்தை பார்த்தே கருத்து சொல்லுகின்றன. மேலும் விஜே பார்வதி நினைத்திருந்தால் எப்போவோ உயர்ந்த இடத்திற்கு சென்று இருப்பாராம்.

அவருடைய பெற்றோர்கள் பார்வதியிடம் திறமைக்கு மட்டுமே மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் உடம்புக்கு இல்லை என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளார்களாம். எந்த இடத்திலுமே அட்ஜஸ்ட் செய்து கொள்ள அவசியம் இல்லை என்றும் அவர் நினைத்திருந்தால் எப்போதோ நல்ல இடத்திற்கு சென்று இருப்பாராம்.

ஆனால் அதை விஜே பார்வதி செய்யவில்லை என்று காயத்ரிவுடன் உரையாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகப் பரவி வருகிறது.