அடுத்த 100 நாட்கள் உன்னை நேரில் சந்திக்காம.. வெங்கட்பிரபு போட்ட ட்விட், உறுதியானது பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்!

விஜய் டிவியின் அக்டோபர் 3ஆம் தேதியானா இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் துவங்க உள்ளது. இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ள 16 போட்டியாளர்களை பற்றி எதுவும் அறிவிக்காமல் விஜய் டிவி இதுவரை சஸ்பென்சாக வைத்துள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு வாரம் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

எனவே இந்த சீசனின் போட்டியாளர்கள் இவர்கள்தான் என சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இறுதியாக யார் யார் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற லிஸ்ட் இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் தெரிய வரும். இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபு, தொகுப்பாளரும் யூடியூபருமான அபிஷேக் ராஜாவின் பிறந்த நாள் அன்று வாழ்த்து தெரிவித்த ட்விட் ஒன்றில் விஜய் டிவியின் சீக்ரெட்டை உடைத்துள்ளார்.

ஏனென்றால் அந்த ட்விட்டரில், ‘என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்த 100 நாட்கள் உன்னை நேரில் சந்திக்காமல் இருக்க வாழ்த்துக்கள். கலக்கு’ என வெங்கட்பிரபு அபிஷேக் ராஜாவிற்கு ட்விட் செய்துள்ளார். இதன் மூலம் அபிஷேக் ராஜா கண்டிப்பாக இந்த சீசனின் ஒரு போட்டியாளராக பங்கேற்க போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கண்ணா விற்கு பாய் பிரண்டாக அபிஷேக் ராஜா நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அபிஷேக் ராஜா விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்பதை பிரபல யூடியூப் விமர்சகரான பாண்டா பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அபிஷேக் ராஜாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவர் எப்படிப்பட்டவர் என்பது தனிப்பட்ட முறையில் தெரியும். 24 மணி நேரமாக 20 கேமராக்களும் அபிஷேக் ராஜா நடந்து கொள்வதைப் பார்த்தால் கண்டிப்பாக ரசிகர்கள் எரிச்சல் அடைந்துவிடுவார்கள்.

நான் இவ்வாறு சொல்வது தவறு என நிரூபித்தால், அதுவும் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்று  குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த ட்விட்டர் பதிவை பாண்டா பிரசாந்த்  உடனே நீக்கிவிட்டார். இருப்பினும் அதை பார்த்த ரசிகர்கள் இந்த செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பினர்.

எனவே அபிஷேக் ராஜா பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சிக்கு செல்வதை இருவர் வெளிப்படையாகவும் சொல்லியது ரசிகர்களே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை குறித்த ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.