அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்த லாஸ்லியா.. ஹீரோயினுக்கே டப் கொடுக்கும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3வது சீசனில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நடிகையானார்.

பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாக்கியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் கூட லாஸ்லியா மற்றும் குக் வித்த கோமாளியில் பங்குபெற்ற அஸ்வின் இணைந்து சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர்.

லாஸ்லியாவுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஹர்பஜன் சிங் ஜோடியாக பிரண்ட்ஷிப் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். எப்போதுமே நடிகையின் படம் வெளியாவதாக இருந்தால் அந்த நடிகை ஏதாவது ஒரு போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவார்கள்.

அதற்கு காரணம் படம் வெளியாவதற்கு முன்பே இந்த மாதிரி புகைப்படங்கள் ரசிகர்களிடம் பிரபலமானால் உடனே ரசிகர்கள் அடுத்து இந்த நடிகையின் படம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் இருப்பார்கள். இதன்மூலம் படம் வெற்றி அடையும் இந்த யுத்தியை தான் தற்போது லாஸ்லியாவும் பயன்படுத்தியுள்ளார். அடுத்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கும் விதமாக ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.

படுமோசமான கவர்ச்சியில் DD.. மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

நடிகையாக இருந்து பின் தொகுப்பாளராக மாறியவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவருடைய தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு ஏன் யாருக்கும் பேட்டி கொடுக்காத நயன்தாரா கூட டிடி பேட்டி எடுத்தால் ...