அடுத்த சபதத்திற்கு ரெடியாகும் விஷால்.. 60பதாம் கல்யாணம் கூட கேள்விக்குறிதான் போல

நடிகர் விஷால் சினிமாவை போலவே நிஜத்திலும் அதிரடியாக செயல்களை செய்து வருகிறார். நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி என நடிகர்கள் கார்த்தி, நாசர், கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோருடன் இணைந்து முதல் முறையாக களம் கண்டு வெற்றி கண்டார்.

அப்போது வெற்றி பூரிப்பில் அவர் அளித்த ஒரு வாக்கு அவரது திருமணத்தை தள்ளி போட்டு வருகிறது. ஆம் வெற்றி பெற்ற பின்னர் பேட்டி அளிக்கையில் நடிகர் சங்கத்துக்கு புது கட்டடம் கட்டி கொடுத்து விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என சபதம் எடுத்தார். ஆனால் இப்போது வரை அப்படி ஒரு கட்டடம் கட்டப்படவில்லை.

சில சட்டரீதியாக ஓட்டு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டு கடந்த மார்ச் 20ஆம் தேதி எண்ணிக்கை நடந்து இரண்டாவது முறையாக பாண்டவர் அணி வெற்றியடைந்துள்ளது. நாசர் தலைவராகவும், விஷால் பொது செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டே அடிக்கால் நாட்டப்பட்ட புது கட்டடம் இன்றும் முடியாமல் உள்ளது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல கூறிய வாக்கை நிறைவேற்றாமல் திருமணம் செய்து கொள்ள முடியாமல் நடிகர் விஷால் தவித்து வருகிறார். சென்னை டி நகரில் கட்டப்பட்டு வரும் அந்த கட்டடம் எதனால் நின்று போயுள்ளது என உள்ளிருப்பவர்களுக்கே தெரியும்.

இந்நிலையில் சங்கத்தின் பொதுக்கூட்டம் வருகிற மே 1ஆம் தேதி கூடவுள்ளது. மீண்டும் பொதுக்குழு கூட்டத்தில் உறுதியாக விஷால் வாக்கு கொடுக்க உள்ளார் என பேசப்பட்டு வருகிறது. அதில் பல தரப்பட்ட சர்ச்சைகள் உருவாகும் என்று பெரிதளவு எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியாவது இந்த சங்கத்தை கட்டிவிட வேண்டும் என்று முழு முயற்சியில் இறங்கியுள்ளார் விஷால். இந்த கட்டிடம் கட்டுவதற்காக விஷால் ஏதாவது புது சபதம் போட்டாள், அவரின் கல்யாணம் பெரிய கேள்விக் குறியாகிவிடும். அறுபதாம் கல்யாணம் கூட நடக்காது போல என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்

அதற்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் இந்த கட்டடத்திற்காக நடிகரும், சங்க பொருளாளருமான கார்த்தி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியது குறிப்பிடதக்கது. இதற்கு இடையில் விஷால் அடுத்த லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் திருமணம் நிச்சயதார்த்துடன் நின்று போனது.