உலகநாயகன் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அஞ்சாதே நரேன், காயத்ரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். விக்ரம் படத்தை கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்து வருகிறார்.

உலகநாயகனின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ், விக்ரம் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இப்படத்தில் கமலஹாசன் மகனாக நடிகர் ஜெயராமனின் மகன் காளிதாஸ் ஜெயராமன் நடித்துள்ளார்.

விக்ரம் படம் உலகநாயகனின் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கமலஹாசன் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதன்பிறகு, ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் பரவினாலும் 200 கோடி பட்ஜெட்டான இந்த படத்தை ஆண்டவர் டீலில் விட்டு விடுவாரோ என்ற பயத்தில் லைக்கா மற்றும் சங்கர் உள்ளனர்.

மேலும் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ள மலையாள படத்திற்கு கமலஹாசன் திரைக்கதை அமைக்க உள்ளார். விக்ரம், இந்தியன் 2 படங்கள் முடித்தபிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா ரஞ்சித் முன்னதாக ரஜினியின் காலா, கபாலி படத்தை இயக்கியுள்ளார்.

உலக நாயகனுடன் முதன்முறையாக பா ரஞ்சித் கூட்டணி அமைக்க உள்ளார். பா ரஞ்சித் படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படங்களை முடித்து விட்டு உலகநாயகன் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் நடிக்க திட்டமிட்டுள்ளார் கமலஹாசன். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கமலின் படங்கள் தொடர்ந்து வரலாம் என உலகநாயகனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.